மஹாராஷ்டிரா மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடந்த ஒரு திடுக்கிடும் சாலை சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்கூட்டரில் சென்ற குட்டிப்பெண் மீது குறுக்குப்பாதையில் திடீரென வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது.

வைரலான வீடியோவில், கண நேரத்தில் சுதாரித்த அந்தப் பெண் லாரியின் பம்பரைப் பிடித்து தொங்கியபடி தன்னை காப்பாற்றிக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் லாரி நின்றதும் நிலைமை அமைதியானது.

அதன்பின் அவர் எந்த வெளிப்படையான காயமும் இன்றி லாரியிலிருந்து இறங்கி நடந்து செல்லும் காட்சிகள் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

இந்த காட்சியை பார்த்த வலைதள பயனர்கள், இது “அதிர்ஷ்ட தப்பிப்பு” என பதிவிட்டு, அந்தப் பெண்ணுக்கு “ஆயுசு ரொம்ப கெட்டி” என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.