தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை (அக்.13) ஆந்திரப் பிரதேசத்திற்கு செல்ல உள்ளார்.
பிற்பகலில் ஆந்திரா செல்லும் அவர், மாலை 4.15 மணிக்கு அம்மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு மற்றும் கோதாவரி–காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பயணத் திட்டப்படி இரவு 8.30 மணியளவில் அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





