ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, இந்தியாவில் ஒன்பது நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும் விழாவாகும். இந்த ஆண்டு கோல்கட்டா மற்றும் குஜராத் உள்ளிட்ட இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழா இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், இந்திய பாரம்பரிய உடை அணிந்த இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் கர்பா நடனமாடி நவராத்திரியை உற்சாகமாக கொண்டாடினர். இதைக் கண்டவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், குஜராத்தில் வழக்கமான கர்பா கொண்டாட்டம் டைம்ஸ் சதுக்கத்திலும் நடந்தது பலரின் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது.