சென்னை: தமிழகத்தில் கோவில்களுக்குள் பக்தர்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல ஹிந்து சமய அறநிலையத்துறை (HR&CE) அனுமதி அளித்துள்ளது. ஆனால் கோவில் வளாகத்தில் இருக்கும் முழு நேரமும் மொபைல் போன் கட்டாயமாக சுவிட்ச் ஆப் நிலையில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
2026 செப். 1 முதல் மாநிலத்தின் முக்கியமான 52 கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல முழுமையான தடை அமலில் இருந்தது. நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் போது அவசர தேவைகளுக்காக தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தற்போது அந்த கட்டுப்பாட்டை தளர்த்தி மொபைல் போன்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கோவிலில் சிலைகள் மற்றும் பூஜைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது, செல்பி எடுப்பது மற்றும் சமூக வலைதள பதிவுகள் செய்வதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என துறை தெரிவித்துள்ளது. விதிமீறல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.





