தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நியமிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக பணியாற்றிய ஆர்.என். ரவி கடந்த மார்ச்சில் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருந்த அர்லேக்கருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அர்லேக்கரை கேரள ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், அர்லேக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் அவரது பணி சிறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.