சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தர்மலிங்கம் லிங்கேஸ்வரன் மற்றும் பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் உயர்ந்த மரபும் கண்ணியமும் கொண்ட நீதித்துறை அமைப்பு என குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நீதியின் மாண்பையும் பாதுகாக்கும் வகையில் அவர்கள் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

மேலும், உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பில் அவர்களின் பணி சிறக்கட்டும் என முதல்வர் வாழ்த்தினார்.