ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த ஒரு தனியார் பள்ளி வெளியிட்ட ‘குட் டச், பேட் டச்’ என்ற குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு வீடியோ, சமூக வலைதளங்களில் 1 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு சிறுமி ‘குட் டச்’ மற்றும் ‘பேட் டச்’ என்று எழுதப்பட்ட இரண்டு பதாகைகளை கையில் பிடித்திருக்கிறார். அருகில் நிற்கும் ஆசிரியை, எந்த வகையான தொடுதல் ஏற்றது, எது ஏற்றதல்ல என்பதை பதாகைகளை காட்டச் செய்து விளக்குகிறார்.

குழந்தைகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த புரிதலை எளிய முறையில் உருவாக்கும் நோக்கில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வலைதளங்களில் இந்த முயற்சி பரவலாக பகிரப்பட்டு, குழந்தைகளுக்கான தெளிவான செய்தியுடன் வந்த விழிப்புணர்வு முயற்சியாக பலரும் பாராட்டி வருவதாக கூறப்படுகிறது.