வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் தோழி சாந்தி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளை தற்போது சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது.
மனு விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, ஏற்கெனவே SIT அமைக்கப்பட்டுள்ள நிலையில் சிபிஐ விசாரணை அவசியம் என்ன என கேள்வி எழுப்பியது.
இதற்கு மனுதாரர் தரப்பில், மனு தாக்கல் செய்த பின்னரே SIT அமைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.





