புதுடில்லி: தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தலைநகரில் ‘கரப்பான்பூச்சி’ அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர்.

இதற்கிடையில், மத்திய அரசு சமீபத்தில் ஜந்தர் மந்தரை அனுமதிக்கப்பட்ட போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த சூழலில், தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்தியதாக கூறி, அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ், அஜின்க்யா ஷிண்டே ஆகிய மூவரை டில்லி போலீசார் கைது செய்தனர்; பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 5 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.