வங்கதேசத்தின் முன்னாள் இடைக்கால அரசுத் தலைமை ஆலோசகரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் நியூயார்க் விமான நிலையம் வந்தபோது, அங்கு கூடியிருந்த வங்கதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், வன்முறை, சட்ட ஒழுங்கு சீர்குலைவு மற்றும் காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றுக்கு யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசே காரணம் என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
யூனுஸ் விமான நிலைய முனையத்திலிருந்து வெளியேற முயன்றபோது, அவரைச் சூழ்ந்துகொண்டவர்கள் “நீ ஒரு பயங்கரவாதி”, “வங்கதேசத்தின் ஜனநாயகத்தை அழித்துவிட்டாய்”, “இங்கிருந்து திரும்பிப் போ” போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக தலையிட்டு, யூனுஸை மீண்டும் விமான நிலைய முனையத்தின் உள்ளே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.





