வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான முறைகேடுகள் குறித்து நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தி.மு.க. “கள்ள மவுனம்” காக்கிறது என்று பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

அறிக்கையில், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலை, ஆளுங்கட்சியாக இருக்கும் போது வேறு நிலை என தி.மு.க. செயல்படுவதாகவும், மாநில உரிமைகள் குறித்து “அரசியல் நாடகம்” நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்ற காலம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தார் என்றும், ஆரம்பத்தில் எதிர்ப்பது போல காட்டிய தி.மு.க. பின்னர் தேர்தல் கமிஷனும் பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டதாகவும், மாநிலம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், பீஹாரில் எஸ்.ஐ.ஆர். அறிவிப்பு வந்த உடனே தங்கள் கட்சி கடுமையாக எதிர்த்ததாகவும், பணிகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதில் தி.மு.க. பங்கெடுத்ததாக குற்றம்சாட்டிய அவர், எஸ்.ஐ.ஆர். பணிகளில் தி.மு.க. செய்ததாக கூறும் செயல்களை முழு ஆதாரங்களுடன் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவோம் என்றார்.