ஜெர்மனியின் போசும் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீப்பற்றிய காரணம் இன்னும் உறுதியாகவில்லை.
தரைதளத்தில் தொடங்கிய தீ, வேகமாக மேல்மாடிகளுக்கும் பரவியதால் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவத்தில் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு பெண்கள், 26 வயதுடைய ஒரு ஆண் என மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ரொமேனியாவைச் சேர்ந்த 41 வயது நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.





