டெஹ்ரான்: அமெரிக்கா–ஈரான் மோதல் சூழ்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி வரும் கப்பல்களை தாக்குவதற்காக கடலில் கன்னிவெடிகள் பதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘ஜிஎப்எஸ் பிரைட்’ என்ற சரக்குக் கப்பல் அந்தப் பகுதியில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கப்பலில் ஏற்றிச் சென்ற சுமார் 2,500 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அந்தக் கண்டெய்னர்களில் இருந்த விலையுயர்ந்த ஐபோன்கள் மற்றும் வாசனை திரவிய பாட்டில்கள் தண்ணீரில் மிதந்ததாகவும் தகவல்.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில், படகுகளில் வந்தவர்கள் மிதந்த பொருட்களை போட்டி போட்டு அள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று, அவை வைரலாகி வருகின்றன.