சவுதி அரேபியாவில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடந்த அண்மை தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பதற்றமான சூழல் காரணமாக கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் அக்.17 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டவர்கள், பயணத் திட்டங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சவுதியில் உள்ள இந்தியர்களுக்காக ரியாத் இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. சவுதியை விட்டு வெளியேற விரும்புவோர் கத்தார் மற்றும் பஹ்ரைன் விமான நிலையங்களில் இருந்து கிடைக்கும் விமானங்களை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா அல்லது ஆன்மிகப் பயணமாக சென்றவர்கள் விமானம் கிடைக்காத காரணத்தால் விசா காலம் முடிந்திருந்தாலும் அபராதம் இன்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படும் என தூதரகம் கூறியுள்ளது. உதவிக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





