விலைவாசி உயர்வு தொடர்பாக முதல்வர் விஜயை குறிவைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், முதல்வர் லண்டன், கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களுக்கு செல்லும் பயணங்களை குறிப்பிட்டு, அத்தகைய பயணங்களில் தவறு இல்லை என்றாலும், உள்ளூரில் உள்ள மளிகைக் கடைகளுக்கும் சென்று விலைவாசி நிலவரத்தை நேரில் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், உணவுத்துறை அமைச்சரிடம் மட்டும் கேட்டுவிட வேண்டாம் என்றும், அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்று கூறிவிடுவார் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.
பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய மக்கள், விலைவாசி உயர்வால் பயத்தில் உறைந்துபோய் இருப்பதாக கூறிய அவர், அவர்களிடமே நேரடியாக கேட்டு அறிய வேண்டும் என்று முதல்வருக்கு அறிவுரை வழங்கினார்.





