சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 14 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படவில்லை; அதை உயர்த்த வேண்டும் என்பதுடன் தொடர்புடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.




