தமிழகத்தில் வியாழக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நேற்று மதியத்திலிருந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து, இரவு முழுவதும் தொடர்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி, ஈரோடு, கோவை, தேனி மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி அடையாமடையில் 179.6 மி.மீ. மழை பதிவாகி முதலிடத்தில் உள்ளது; ஈரோட்டில் 156 மி.மீ. பதிவானது.
மேலும் பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் 153 மி.மீ., கோவை மாக்கினாம்பட்டி 149 மி.மீ., பெரியகுளம் 147 மி.மீ. என குறிப்பிடத்தக்க அளவுகள் பதிவானன. கன்னியாகுமரி பெருஞ்சாணியில் 127.6 மி.மீ.வும், கரூர் பரமத்தியில் 126.6 மி.மீ.வும் பதிவானது.
வைகை அணை 124.2 மி.மீ., பழனி 118 மி.மீ., கரூர் பஞ்சப்பட்டி 115 மி.மீ. எனவும், கன்னியாகுமரியில் புத்தன் அணை 112 மி.மீ., சிற்றார்-1 111.8 மி.மீ., ஆனைகிடங்கு 108.2 மி.மீ. எனவும் மழை அளவுகள் பதிவாகின.
பெரம்பலூர் 103 மி.மீ., ஆண்டிப்பட்டி 102 மி.மீ. எனவும், ஊத்துக்குளி மற்றும் தென்காசி சிவகிரி தலா 100 மி.மீ. எனவும் கனமழை பதிவானதாக 24 மணிநேர மழை நிலவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





