சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. பண்டிகை கால கட்டண நிர்ணயம் மற்றும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்குவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் போக்குவரத்து துறை, காவல் துறை, சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் சங்கத் தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கான பண்டிகை கால கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.