பாஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி (98), நேற்று மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் துணை பிரதமராக இருந்த அவர், தீவிர அரசியலில் இருந்து விலகி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.
அக்டோபர் 17 அன்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐசியூவில் நரம்பியல் துறை மருத்துவர் வினித் சூரி அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





