ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (எல்ஓசி) பகுதியில் சந்தேகத்திற்கிடமான நால்வர் குழுவின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களை சுற்றிவளைத்தபோது அவர்கள் பயங்கரவாதிகள் என உறுதி செய்யப்பட்டதுடன், இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கிச்சூடு ஏற்பட்டது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சியை பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மீதமுள்ள இருவரின் நிலை குறித்து உடனடி தகவல் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை தொடர்வதுடன், எல்லைப் பகுதியில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.