சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் சீரற்ற சூழ்நிலையை முன்னிட்டு, பெட்ரோல் மீது விதிக்கப்படும் ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 50 பைசாவிலிருந்து ரூ.2.50 ஆக மத்திய அரசு அடுத்த இரண்டு வாரங்களுக்கு உயர்த்தியுள்ளது.
அதே நேரத்தில், டீசல் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.16 இலிருந்து ரூ.8.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரு எரிபொருட்களுக்கும் சாலை மற்றும் உட்கட்டமைப்பு வரி பூஜ்ஜியமாகவே தொடர்கிறது.
விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரி மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.10.50 ஆக நீடிக்கிறது. புதிய வரி விகிதங்கள் அக்டோபர் 16 முதல் அமலுக்கு வருகிறது.
மேற்காசிய பகுதியில் நிலவிய பதற்ற சூழ்நிலைக்கிடையே, உள்நாட்டில் போதுமான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் கடந்த மார்ச் 27 முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்றுமதி வரிகள் விதிக்கப்பட்டன. சர்வதேச கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, இந்த வரிகள் இரு வாரங்களுக்கு ஒருமுறை சீராய்வு செய்யப்படுகின்றன.
உள்நாட்டு நுகர்வுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.





