குழந்தைகள் இணையதளங்களைப் பயன்படுத்த வயது அடிப்படையில் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமை என்றும், அரசியலமைப்பின் படி குழந்தைகளுக்கும் இணையதளங்களை அணுக உரிமை உள்ளதாகவும் தெரிவித்தது.

குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களின் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்றும், பாதுகாப்பு என்ற பெயரில் அணுகலை மறுப்பது நியாயமற்றது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

முழுமையான தடை விதிப்பதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் ‘சைல்டு மோட்’ போன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அம்சங்களை மேலும் வலுப்படுத்தலாம் என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.