இசையமைப்பாளர் தேவாவின் இறுதி நிமிடங்கள் குறித்து அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார். தந்தையை திடீரென இழந்த அதிர்ச்சியையும், நடந்த நிகழ்வுகளையும் அவர் விவரித்தார்.
ஸ்ரீகாந்த் தேவா கூறியதன்படி, காலை நேரத்தில் தேவாவுக்கு திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. வீட்டில் இருந்தபோது நெஞ்சில் ஒருவித படபடப்பு இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார். ஆம்புலன்ஸ் வர தாமதமாகலாம் என நினைத்து, குடும்பத்தினர் அவரை காரில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிபியூ (CPR) முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவரை காப்பாற்ற முடியவில்லை என அவர் கூறினார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாக கூறிய ஸ்ரீகாந்த் தேவா, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவித்ததற்காக முதல்வருக்கும் அமைச்சருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
மேலும், ஆற்காடு அருகே சக்கரமல்லூர் என்ற கிராமத்தில் தேவாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும், நாளை மதியம் 1 மணியளவில் இங்கிருந்து புறப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.





