சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மழைக்கால புகார்கள் தெரிவிக்கவும் உதவி பெறவும் சென்னை மாநகராட்சி தனிப்பட்ட மொபைல் எண்களை அறிவித்துள்ளது.

வட்டார துணை ஆணையாளர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: வடக்கு (9445025800), மத்தியம் (9445190150), தெற்கு (9445190100) என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், மண்டல வாரியாக மண்டல அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட எண்களை பயன்படுத்தி குடியிருப்பவர்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

மண்டல வாரியான எண்கள் (மண்டல அலுவலர் / கண்காணிப்பு அலுவலர்):

  • திருவொற்றியூர்: 94451 90001 / 89255 46901
  • மணலி: 94451 90002 / 89255 46902
  • மாதவரம்: 94451 90003 / 89255 46903
  • தண்டையார்பேட்டை: 94451 90004 / 89255 46904
  • ராயபுரம்: 94451 90005 / 89255 46905
  • திரு.வி.க.நகர்: 94451 90006 / 89255 46906
  • அம்பத்தூர்: 94451 90007 / 89255 46907
  • அண்ணாநகர்: 94451 90008 / 89255 46908
  • தேனாம்பேட்டை: 94451 90009 / 89255 46909
  • கோடம்பாக்கம்: 94451 90010 / 89255 46910
  • வளசரவாக்கம்: 94451 90011 / 89255 46911
  • ஆலந்தூர்: 94451 90012 / 89255 46912
  • அடையாறு: 94451 90013 / 89255 46913
  • பெருங்குடி: 94451 90014 / 89255 46914
  • சோழிங்கநல்லூர்: 94451 90015 / 89255 46915