சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய பெய்த மழையால் நகரின் பல பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், தேங்கிய மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை வலுப்படுத்த, சென்னையின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்வர் விஜய் நியமித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

சென்னையில் மழை–வெள்ள பாதிப்பு நிலவரம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு, மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது ஆதவ், அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர்.