யூட்யூபர் சவுரவ் ஜோஷி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் விளையாடும் காட்சியுடன் வெளியான ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தில் தோல்வியடைந்தவர் ஒரு ‘டாஸ்க்’ செய்ய வேண்டும் என்ற வடிவில் அந்த வீடியோ அமைந்துள்ளது.
அதில், மனைவி அவந்திகா தோற்றதும், கணவர் “நான் சொல்வதை செய்ய வேண்டும்” என்று கூறி, நாய்க்கு வைக்கும் தண்ணீர் பாத்திரத்தில் இருந்து குடிக்கச் சொல்வதாக காட்சி வருகிறது. அவந்திகா முகம் சுளித்தாலும், தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒரு வாய் குடிப்பதாக வீடியோவில் தெரிகிறது.
இந்த செயலை பலரும் கண்டித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். ‘ரீல்ஸ்’ மோகம் காரணமாக இப்படிப்பட்ட செயல்களுக்கு செல்லக் கூடாது என்றும், இது சுகாதாரக்கேடானது என்றும் வலைதளவாசிகள் கூறுகின்றனர்.
மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததாக இருந்தாலும் கூட, ஒருவரை இவ்வாறு அவமதிக்கும் வகையில் செய்யச் சொல்வது சரியா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. வீடியோ தொடர்ந்து பகிரப்பட்டு, உள்ளடக்க உருவாக்கத்தில் எல்லைகள் என்ன என்பதைக் குறித்த விவாதத்தையும் தூண்டியுள்ளது.





