சினிமா இசையமைப்பாளர் தேவா (75) நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் ஹாசன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து விடிய விடிய அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச்சடங்குகளுக்காக இன்று தேவாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
போலீசாரின் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.





