புற்றுநோய் சிகிச்சை செலவை குறைக்கும் நோக்கில், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) 137 அவசியமான புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்சம் 30 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின் படி, இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிகப்படியான லாபம் ஈட்டுவதைத் தடுக்க மொத்த மற்றும் சில்லறை வர்த்தக லாப வரம்பு 30 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், சம்பந்தப்பட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு நடைமுறை நவம்பர் 9 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு சுமார் ரூ. 2,500 கோடி வரை மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுநலன் கருதியும், ஏழை எளிய மக்களும் புற்றுநோய் சிகிச்சையை எளிதில் பெறும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இது 2019-ல் 42 புற்றுநோய் மருந்துகளுக்கு லாப வரம்பை 30 சதவீதமாக கட்டுப்படுத்தி, 526 பிராண்டுகளின் விலையை 90 சதவீதம் வரை குறைத்த திட்டத்தின் தொடர்ச்சியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





