அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.
சென்னைக்கு அக்டோபர் 18 அன்று அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 18 அன்று மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி.
அதே நாளில் கனமழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட 23 மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்.





