அரிசி கடத்தல் நடவடிக்கை கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் குமார் சனிக்கிழமை எச்சரித்தார். அரிசி மூட்டைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சுய சேவை பிரிவில், சன்ன அரிசி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

சம்பா சாகுபடிக்காக 8 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எல்-நினோ மற்றும் தண்ணீர் தாமதமாக வந்தது போன்ற காரணங்களால் சில விவசாயிகள் தாமதமாக சாகுபடி செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பின் அளவைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் த.வெ.க. நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்படுவதாக வரும் தகவல்களை குறிப்பிட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; சட்டம் தன் கடமையை செய்யும் என்றார். இதற்கு முன், அரிசி பாக்கெட்டில் முதல்வர் படம் இல்லாததை அதிகாரிகள் கவனித்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் படத்துடன் சிறிய ஸ்டிக்கர்கள் வாங்கி வந்து பைகளில் ஒட்டி, பின்னர் பொதுமக்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.