சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழாக்களை கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன் பதிவில், மனிதர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் தொழில்களை இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும் தொழிலின் மேன்மையையும் நினைவுகூரும் நாளாக ஆயுத பூஜை அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கல்வி, கலை, தொழில் உள்ளிட்ட துறைகளில் புதிய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாக விஜயதசமி கருதப்படுவதாகவும், தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் சிறக்க வேண்டுமெனவும் அவர் வாழ்த்தினார்.
இந்த திருநாட்கள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையும் வளமும் சேர்க்கட்டும் என கூறிய முதல்வர், நன்மை தரும் புதிய முயற்சிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் மேன்மை பெற்று ‘வெற்றி தமிழகத்தை’ உருவாக்குவோம் என்றும், ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்; அனைவரின் வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





