நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடுமையாக கண்டித்தார். மும்பை போலீசார் இந்த வழக்கை மிகுந்த தீவிரத்துடன் கையாள்ந்து, கிடைத்த தடயங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய பட்னவிஸ், அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார். மறைந்து இருந்து தொலைதூரத்தில் இருந்து உத்தரவிடுவோரையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மஹாராஷ்டிராவிற்குள் இருந்து செயல்படவில்லை; மாநிலத்திற்கு வெளியிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ இருந்து செயல்படக்கூடும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, வெளிநாட்டு தொடர்புகள் இருந்தால் மத்திய அரசின் உதவியும் பெறப்படும் என்றார்.
இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் குற்றப்பிரிவு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். பீஹாரை சேர்ந்த ரோஷன் (22), ஹரியானாவை சேர்ந்த ரஹான் (18) மற்றும் 17 வயது சிறுவன் என போலீசார் தெரிவித்தனர்.





