விலைவாசி உயர்வும் பொருளாதார சீர்குலைவும் காரணமாக பிரான்சில் நேற்று போராட்டம் திடீரென தீவிரமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சில வாரங்களாக உருவாகி வந்த எதிர்ப்புகள் ஒரே நாளில் பல இடங்களில் வன்முறையாக வெடித்தன.
கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான கட்டடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தலைநகர் பாரிசில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
போலீசார் நடவடிக்கையில் 1,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லிமோஜ் நகரில் 143 ஆண்டுகள் பழமையான நகரசபை கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், அங்குள்ள சுற்றுலா அலுவலகமும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கலவரத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் லுனஸ் கண்டனம் தெரிவித்தார்.
அதிபர் எமானுவல் மேக்ரான், அமைதியான போராட்டங்களில் சிலர் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறி, அவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். தொலைக்காட்சி வழியாக நாட்டுமக்களுக்கு உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





