காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்டதாக கூறப்பட்ட படிக்கட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
தகவலின்படி, கோவிலின் கருவறைக்கு செல்லும் வழியில் பாரம்பரியமாக ஆறு படிக்கட்டுகள் இருந்தன. கோவில் நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து அந்த அமைப்பை மாற்றி, படிக்கட்டுகளை பத்தாக உயர்த்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மாற்றம் ஆகம நெறிகளுக்கும் கோவிலின் பாரம்பரியத்துக்கும் எதிரானது என பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து காஞ்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், பத்தாக மாற்றப்பட்டிருந்த படிக்கட்டுகள் மீண்டும் ஆறு என்ற அடிப்படையில் பழைய நிலைக்கு மாற்றப்பட்டதை வரவேற்றார். தொன்மையான ஆலயங்களின் ஆகம நெறிகளையும் பாரம்பரியத்தையும் காக்க மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதை குறிப்பிட்டு, ஆகம விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தால் போராடி பாதுகாப்போம் என்றும் தெரிவித்தார்.





