சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் வன்முறை சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்த 26 வயதான ‘சுள்ளான் மதன்’ என்பவரை சிலர் விரட்டிச் சென்றதாகவும், பின்னர் கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து விசாரணை தொடர்கிறது.




