மும்பை ஜூஹு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் பயணித்த காரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்ததாக தினமலர் டிவி செய்தி தெரிவித்துள்ளது.

பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், மொத்தம் 7 முறை சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் நடிகரின் கார் ஓட்டுநர் ஃபிர்தோஷ் காயமடைந்தார். அருகில் நின்றிருந்த ஒரு ரசிகரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் யார், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.