மும்பை ஜூஹூ பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் சென்ற காரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மூன்று பைக்குகளில் வந்த கும்பல் காரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார். ஆனால் காரின் டிரைவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணையை தொடங்கி, தாக்குதலாளர்களை பிடிக்க 12 தனிப்படைகளை அமைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது வரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கும்பலுடன் தொடர்புடையதாக கூறப்படும் அனில் பண்டிட் வெளியிட்ட ஆடியோவில், சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.





