பிரான்சில் பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்து, போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்றாட வாழ்க்கைச் செலவுகள் உயர்வு மற்றும் சமநிலையற்ற பொருளாதாரம் போன்ற காரணங்களால் இந்த நிலை உருவானதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு, பின்னர் பெரும் மக்கள் கூட்டம் வீதிகளில் திரளும் அளவுக்கு விரிந்தது.

கலவரங்களின்போது பல இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், சூறையாடல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன; இதற்கு முன் இல்லாத அளவுக்கு நிலைமை தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரான்சின் தற்போதைய நிலைக்கு குடியேறியவர்களே காரணம் என குற்றம்சாட்டினார். அவர் வெளியிட்ட பதிவில், நிலைமை எல்லை மீறுவதற்கு முன் எல்லைகளை மூடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.