2025-26ம் ஆண்டுக்கான நிதி ஆதார விவரங்களில், தவெக மொத்தம் ரூ.13.30 கோடியை நன்கொடையாக பெற்றதாக தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளது.
அந்த விவரப்படி, அமைச்சர் ஆதவ் ரூ.8.20 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் ரூ.5 கோடி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மொத்த நன்கொடையில் பெரும்பகுதி இந்த இரு அமைச்சர்களிடமிருந்தே வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு கூடுதலாக, தூத்துக்குடி லயன்ஸ் டவுனில் உள்ள ‘ஸ்னோ ஷோ’ நிறுவனம் கேட்பு வரைவோலை மூலம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது.
அதே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘ஸ்னோ எக்ஸ்போர்ட்ஸ் அண்டு இம்போர்ட்ஸ்’ நிறுவனம் மேலும் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், தவெக பெற்றதாக அறிவிக்கப்பட்ட ரூ.13.30 கோடி நன்கொடையில் சுமார் 99% இந்த இரு அமைச்சர்களின் பங்களிப்பாக இருப்பதாக தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




