தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெறும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 35–45 கி.மீ. வேகத்தில், இடையிடையே 55 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.





