நாகலாந்தின் சோவிமா மைதானத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டியில் நாகலாந்து–மிசோரம் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் மிசோரம் அணியின் சின்மய் சுதார் (29) 517 பந்துகளில் 400 ரன் குவித்து அரிய சாதனை படைத்தார். அவரது இன்னிங்ஸில் 45 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் இடம்பெற்றன.
முதல்தர கிரிக்கெட்டில் இதற்கு முன் 1948-49 சீசனில் மஹாராஷ்டிரா வீரர் பி.பி. பிம்பல்கர் கதியவர் அணிக்கு எதிராக 443 ரன் எடுத்ததே குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது. அதன் பின்னர் 78 ஆண்டுகளாக 400 ரன் எல்லையை எவரும் கடக்கவில்லை.
சுதார் 400 ரன் கடந்த நிலையில், முதல்தர கிரிக்கெட்டில் உலகளவில் 400+ ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில் 10வது இடத்தைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அவர் 400 கடந்ததும் மிசோரம் அணி 581 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது.
சுதாரின் தந்தை ராஜேஷ் சுதார் சுழற்பந்து வீச்சாளர்; மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடியுள்ளார். மேலும், வங்கதேசத்தில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்திய அணியிலும் சின்மய் சுதார் இடம்பிடித்திருந்தார்.





