ஐரோப்பிய நாடான பிரான்சில் விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அரசை விமர்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகள், பலகைகள் ஏந்தி மக்கள் வீதிகளில் பேரணியாகச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு உயர்வும், அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார அழுத்தங்களும் இந்த போராட்டங்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.