இந்தியா–நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) அக்டோபர் 20 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ஏற்றுமதியாளர்களுக்கு “முக்கியமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் முதல் நாளிலிருந்தே வரிவிலக்கு வழங்கப்படுவதுடன், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் வலுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளப் பதிவில் லக்சன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறைந்த வரியில் இந்தியாவில் பெரிய அளவிலான புதிய வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும்.

மேலும், இந்த ஒப்பந்தம் நியூசிலாந்து நிறுவனங்கள் அதிகமாக விற்பனை செய்யவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் உதவும்; இதனால் வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு மற்றும் வருமானம் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவை நோக்கி, ஆக்லாந்து உள்ளிட்ட துறைமுகங்களிலிருந்து அனுப்பப்படும் பொருட்கள் குறைந்த வரியில் சென்றடைய முடியும் என்றும், இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுப்பதற்கான காரணம் இதுவே என்றும் லக்சன் தெரிவித்தார்.