டில்லியில் இன்று நடைபெறும் தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, சில பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு டில்லியில் ராம்லீலா கமிட்டி சார்பில் இந்த தசரா விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் சுமார் 10,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அனுமதிச் சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்.
விழாவை முன்னிட்டு டில்லி போலீசார் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
பாதுகாப்பு பணிக்காக 2,500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.





