சென்னை: வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் குறைந்தது ஏழு நாட்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் இருக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன், அவசர மருந்துகள், ஓ.ஆர்.எஸ்., பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகள் போன்றவை போதுமான அளவில் கையிருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், மருத்துவமனைகளில் மின்சாரம் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடை ஏற்பட்டாலும், ஜெனரேட்டர் மூலம் இடையறாத மின்விநியோகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் இயக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.