2026ம் ஆண்டில் சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட நாடுகளின் புதிய தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் மலேசியா முதலிடத்தையும், இந்தியா 3வது இடத்தையும் பெற்றுள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனம் இப்சோஸ் தெரிவித்துள்ளது.
32 நாடுகளில் சுகாதார தரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 7 வரை 22,528 பேரிடமிருந்து ஆன்லைன் வழியாக கருத்துகள் சேகரிக்கப்பட்டன.
சுகாதார காப்பீடு மூலம் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைப்பது, அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு, மருத்துவமனை படுக்கை வசதி போன்ற அம்சங்களை வைத்து தரவரிசை தயாரிக்கப்பட்டதாக தகவல்.
டாப் 10 பட்டியலில் மலேசியா முதல் இடம், சிங்கப்பூர் இரண்டாம் இடம், இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து வியட்நாம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தாய்லாந்து, தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன. மேலும் பிரான்ஸ் 16வது, பிரிட்டன் 18வது, கனடா 19வது, அமெரிக்கா 20வது, ஜப்பான் 22வது, ஜெர்மனி 24வது இடங்களில் உள்ளன.





