ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் மெகா ஐபிஓ அக்டோபர் 21 அன்று தொடங்கி, அக்டோபர் 23 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடங்கிய முதல்நாளிலேயே முழுமையாக சந்தா பெற்று, இந்திய முதன்மை சந்தையில் வரலாற்றுச் சாதனையாக பதிவானது.

இந்த ஐபிஓவில் பங்கு ஒன்றின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ₹30,213 கோடியைத் திரட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளதாகவும், இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21 காலை 10:39 மணி நிலவரப்படி, 1.03 மடங்கு சந்தா கிடைத்ததாக கூறப்படுகிறது. விற்பனைக்கு விடப்பட்ட 19.75 கோடி பங்குகளுக்கு எதிராக, முதலீட்டாளர்கள் சுமார் 20.25 கோடி பங்குகளுக்கு ஏலம் கோரியுள்ளனர்.

பொதுவாக பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் முதல்நாளில் மெதுவாகவே நிரம்பும். ஆனால் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 85% சந்தா பெற்றதுடன், 100 நிமிடங்களுக்குள் முழுமையாக நிரம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.