ராஜஸ்தான் மாநிலத்தின் மேவாத் பகுதியில் நடந்த திருமண நிகழ்வு, சமூக வலைதளங்களில் பரவலாக பேசுபொருளாகியுள்ளது. திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு செல்லும் விதத்தில் மணப்பெண்கள் வைத்த நிபந்தனையே இதற்குக் காரணம்.
சகோதரிகளான ஐனா, மவுசினா ஆகியோருக்கு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ரோஹில், சஹிர் ஆகியோருடன் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தங்களை புகுந்த வீட்டுக்கு ஹெலிகாப்டரில் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மணப்பெண்கள் கூறியதாக தகவல்.
இரு கிராமங்களுக்கும் இடையிலான தூரம் நடந்து செல்லக்கூடிய அளவிலேயே இருந்தாலும், அந்த ஆசையை நிறைவேற்ற மாப்பிள்ளைகள் இணைந்து ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரூ.5 லட்சம் செலவானதாக கூறப்படுகிறது.
ஊர்மக்கள் பலர் கூடி வேடிக்கை பார்க்க, மணப்பெண்கள் இருவரும் மாப்பிள்ளைகளுடன் ஹெலிகாப்டரில் புகுந்த வீட்டுக்கு சென்று இறங்கினர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.





