புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
அப்போது, விஜயபாஸ்கருக்கு “பல வித்தைகள் தெரியும்” என்றும், அனைவரையும் ஒன்றிணைத்து களத்தில் இறங்குவார் என்றும் அவர் கூறினார். களத்தில் நிற்பதோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெறுவார் எனவும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் விஜய்க்கு பின்னால் இருந்து விஜயபாஸ்கர் பணியாற்றுவார் என்றும் அமைச்சர் கூறினார்.
இதையடுத்து, “விஜயபாஸ்கர் களம் காணப் போகிறார் என்று சொல்கிறீர்களே; இது தேர்தலை ஒட்டிய அரசு விழாவாக பார்க்கலாமா?” என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த செங்கோட்டையன், “களம் காண்பது” என்ற சொல் வெற்றிக்காக உறுதுணையாக இருப்பார் என்ற பொருளில்தான் கூறியதாகவும், அதை வேறு எந்த விஷயத்துடனும் இணைத்து பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.





