டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டு, மொத்தம் 821 காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டது. செப்டம்பர் 9ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை தற்போது 846 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒற்றை பதிவு (OTR) டாஷ்போர்டு வழியாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.